ஆசிய சாம்பியன் டிராபி போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதியது. இதற்கு முன் நடைபெற்ற 4 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்தியாவிடம் சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கொரியா ஆகிய அணிகள் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் இதனால் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது