நீளம் தாண்டுதலில் 7. 97 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின்..

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் நீளம் தாண்டுதல் பிரிவில் பதக்கத்தை வென்றுள்ளார் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். கஜகஸ்தானில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் 7.97 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார் ஜெஸ்வின் ஆல்ட்ரின்.

இந்திய அணியில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகளில் 4 பேர் பதக்கம் வென்றுள்ளனர். ஆசிய உள்ளரங்க தடகள தொடரில் இந்திய அணியில் பங்கேற்றுள்ள 7 தமிழக வீரர்களில்  இதுவரை 4 வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.