ஆசியர்கள் மீதான தாக்குதல்…. கறுப்பினத்தவரின் வெறிச்செயல்…. வெளியான வீடியோ காட்சி…!!

அமெரிக்காவில் உள்ள ஆசியர்கள் மீது கறுப்பினத்தவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர்கள் கடந்த சில நாட்களாக ஆசியர்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆசிய பெண் ஒருவர் மன்ஹாட்டன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கருப்பினத்தவர் அவரை எட்டி உடைத்துள்ளார். இதனால் அந்தப் பெண் நிலை தடுமாறி கீழே விழுகின்றார். அதன்பின்னர் கறுப்பினத்தவர் திரும்பவும் அந்த பெண்ணை காலால் பலமுறை எட்டி மிதித்து விட்டு அங்கிருந்து செல்கின்றார். இந்த நிகழ்வை பக்கத்தில் உள்ள கடையில் இருந்த இரண்டு பாதுகாவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

மேலும் அதில் ஒருவர் கடையின் கதவை அடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை காப்பாற்றவோ அல்லது தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்தவோ யாருமே முயற்சி செய்யவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாலும், இடுப்பு எலும்பு முறிந்ததாலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்து பார்த்து தாக்குதல் நடத்திய அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் பரவலாக பரவி வருகின்றது.