ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சிவராமன், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் போலீசார் அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.

இதனையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, 50 ஆண்டுகளாக நாங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். வீட்டிற்கு பட்டா கொடுக்காமல் தனிநபர் கொடுத்த புகாரின் பேரில் வீட்டை இடிகின்றனர். ஊரில் எல்லாருக்கும் பட்டா கொடுத்த நிலையில், எங்களுக்கு மட்டும் பட்டா வழங்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.