ஆகஸ்ட்-23 முதல் பள்ளிகள் திறப்பு…. உ.பி மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி மற்றும் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *