அ.தி.மு.க-காரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேன்!… ஆனால் உனக்கு கொடுக்கமாட்டேன்!…. சண்டை போடும் திமுக பிரமுகர்கள்….!!!!

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதி ஊராட்சிமன்ற தலைவர் மணி ஆவார். இவருடைய மகன் தமிழரசன் மற்றும் இவரது மச்சான் பால் ராஜ் இணைந்து திருமுடிவாக்கம் பகுதியிலுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற சில தினங்களுக்கு முன்பு திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பால்ராஜ் மற்றும் தமிழரசன் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தரவில்லை எனில் லாரியை கொளுத்திவிடுவோம் என சொல்லியதாகவும் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சம்பந்தபட்ட நபர்கள் புகாரளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மேல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்பின் திருமுடிவாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் மணியின் மச்சான் பால்ராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் வைத்தியலிங்கம் மகன் கார்த்திகேயனுக்கு இடையில் கட்டிடம் கட்டும் மணல் வைக்கும் காண்ட்ராக்டரில் தகராறு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது ஒருவரை ஒருவர் மிரட்டிபேசும் ஆடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அ.தி.மு.க-காரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேன், உனக்கு கொடுக்கமாட்டேன் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது தி.மு.க பிரமுகர்களால் இந்நிலை இருப்பதால், அங்குள்ள நிறுவன ஊழியர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.