அ.தி.மு.கவில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஒற்றை தலைமை பிரச்சனை…. ஓ.பி.எஸ் மாவட்டத்தில் கெத்து காட்டும் இ.பி.எஸ்….!!!

அ.தி.மு.க கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இரட்டை தலைமையே சிறந்தது என்று கூறும் நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். இந்நிலையில் அ.தி.மு.க கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில் தூக்கி எறியப்பட்டது.

அதுமட்டுமின்றி எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை தகாத முறையில் பேசியதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பாதையிலே அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்ததால் வருகிறது ஜூலை 11-ம் தேதிக்கு பொதுக்குழு கூட்டமானது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஓ.பி.எஸ் தனக்கு ஆதரவாளர்களை திரட்டுவதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்படி இருக்க ஓ.பி.எஸ்-ன் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 100% ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை எடப்பாடியின் ஆதரவாளரான அமைப்பு செயலாளர் ஜக்கையன் வெளியிட்டுள்ளார். இவர் ஜூலை 11-ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *