காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மந்திரவாதி என்ற பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை நடவடிக்கையால் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி பேசியதை குறிப்பிட்ட அவர், இத்தனை நாட்களாக இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார் என நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவதாக கூறினார். மேலும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாட்டை திவால் ஆகிவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.