அவரே படைப்பார் அவரே உடைப்பார்…. சாதனைகளின் மன்னன் விஜய்…. ட்விட்டரை கலக்கும் ரசிகர்களின் ஹாஸ்டக்…!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தளபதி விஜய் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி தில் ராஜு தயாரிக்கும் படமாக தளபதி 66 உருவாக உள்ளது.

இந்நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் #MonarchOfRecordsVIJAY எனும் ஹாஸ்டகை ட்ரண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹாஸ்டகிற்கு அர்த்தம் சாதனைகளின் மன்னன் என்பதே ஆகும். விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் வசூல் வரை புதிய சாதனைகளை படைப்பதும் அதே சாதனைகளை விஜய் உடைப்பதும் அவரது வழக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில் தான் அவரது ரசிகர்கள் இந்த ஹாஸ்டகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *