“அவரிடம் தான் என் பிரச்சனையை தீர்த்துவைக்க சொல்லி வேண்டினேன்”… உருக்கமாக பேசிய நடிகர் யோகிபாபு….!!!!

திருக்கார்த்திகை தீபத் திருநாளில் பழனி முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார். அடிவாரத்திலிருந்து ரோப்கார் வாயிலாக மலைக் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்ட அவர், பின் போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு “கார்த்திகை திருநாளில் முருகனை தரிசனம் செய்து என் பிரச்சனைகளை தீர்த்துவைக்க வேண்டினேன்” என்று கூறினார். சென்ற சில தினங்களாக யோகிபாபு மீது பல சர்ச்சைகள் எழுந்திருக்கும் சூழ்நிலையில், அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகாரளிக்கப்பட்டு உள்ளது. இச்சூழலில் தான் அவர் வேறு எந்த கருத்தையும் தெரிவிக்காமல் பழனி முருகன் பார்த்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.