தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் காவல்துறை திமுகவில் ஏவல் துறை போல் மாறிவிட்டது. நாங்கள் மக்கள் பிரச்சினைக்காகவும் பெண்கள் பாதுகாப்புக்காகவும் போராட்டம் நடத்திய நிலையில் திமுக தேசியத்திற்கு எதிராக போராட்டம் நடக்கிறது. ஆளுநர் நிகழ்ச்சி நடைபெறும் போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபாக இருக்கும் நிலையில் அதனை செய்ய தேவையில்லை அப்பாவுக்கு கடும் கண்டனங்கள். ஆளுநர் நிகழ்ச்சியில் தேசத்தையும் தேசியத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர்.

மாநில அரசுகள் சட்டத்தை தெரிந்து கொண்டு நடக்காவிடில் தேசியத்தை எதிர்ப்பதற்கு பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். திமுக அரசியல் விமோசமாக செயல்படும் நிலையில் இதற்கு காவல்துறை துணை போகாமல் செயல்பட வேண்டும். கடந்த 3 வருடங்களில் கடன் வாங்கியது தவிர திமுக அரசு எதுவுமே செய்யாத நிலையில் தமிழ்நாட்டின் கடன் சுமை 9 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழக முன்னேற்றத்திற்கு மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிகப்பெரிய தடையாக இருக்கும் நிலையில் அந்த ஆட்சியை தூக்கி எறிவது மட்டும்தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறப்பதற்கான ஒரே வழி என்று கூறினார்.