கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் பத்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிலா என்ற மனைவி இருந்துள்ளார். அனிலா தனது நண்பரான ஹனிஷ் உடன் இணைந்து புதிதாக பேக்கரி தொடங்கியுள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இதற்கு பத்மநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். ஹனிஷுடன் பேசுவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அனிலா பேக்கரியை மூடிவிட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த பத்மநாதன் காரை வழிமறித்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டார். அப்போது சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அனிலா காருக்குள்ளேயே உடல் கருகி இறந்துவிட்டார். அவருடன் வந்த ஒரு பெண் தீக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதன்பிறகு அனிப்பாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பத்மராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.