அரசு பள்ளிகளில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்பும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள், லீவ் எடுத்து,  தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிவதால் அரசு பள்ளிகளில் சிலபஸ் முடிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு வந்தது. இதனால், அதிக கால விடுப்பில் உள்ள  ஆசிரியர்களின் விவரங்களை உடனே அனுப்பும்படி அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.