மும்பை ஐகோர்ட்டில் 42 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது, அவருக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு வாடகத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தை பிறக்க என்னுடைய சகோதரி கருமுட்டையை தானமாக கொடுத்தார். தற்போது எனது கணவரும், தங்கையும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அதனால் எனது தங்கையின் கருமுட்டை மூலம் பிறந்த 2 குழந்தைகள் மீது எனக்கு உரிமை இல்லை என்று கூறுகின்றனர். அதோடு என்னை அந்த குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவும் இல்லை. எனவே அந்த குழந்தைகளை பார்க்க எனக்கு அனுமதி வேண்டும் என்று கூறிருந்தார்.
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் இவ்வாறு விந்தணு மற்றும் கருமுட்டை கொடுப்பவர்கள் குழந்தைகள் மேல் உரிமை கொள்ள முடியாததோடு, குழந்தையின் பெற்றோர் என்று கூறவும் முடியாது. அதோடு இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் மனுதாரரும் மற்றும் அவரது கணவரும் கையெழுத்திட்டு உள்ளனர். எனவே வாடகைத்தாய் மூலம் பெற்ற 2 குழந்தைகளின் பெற்றோர் மனுதாரரும் மற்றும் அவரது கணவரும் என்பது தெளிவாக தெரிகிறது. இதையடுத்து கருமுட்டையை தானம் செய்த மனுதாரரின் தங்கை குழந்தைகள் மீது உரிமை கொள்ள எந்த ஒரு சட்ட உரிமையும் இல்லை என்று கூறினார். மேலும் மனுதாக்கல் செய்த பெண்ணை தனது குழந்தைகளை பார்க்க வார இறுதி நாளில் 3 மணி நேரம் அனுமதிக்க வேண்டுமென்று அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.