அழுகிய நிலையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியங்கண்டி வாய்க்கால் மேடு அருகில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக தொங்ங்கியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *