அழுகிய நிலையில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை…!!

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்திற்கு எதிரில் இருக்கும் முட்புதரில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரை யாரேனும் கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *