தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்ட நிலையில், அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர் ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்து சமந்தாவுக்காக வருந்துகிறோம். அவர் தன்னுடைய அழகு மற்றும் பொலிவு முழுவதையும் இழந்துவிட்டார்.

அவர் விவாகரத்தில் இருந்து மீண்டு வருவார். சமந்தாவின் சினிமா வாழ்க்கை உச்சத்தை தொடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தசை அலர்ஜி நோய் அவரை பெரிய அளவில் பாதித்து, மீண்டும் பலவீனப்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நடிகை சமந்தா ரிட்வீட் செய்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் எனக்கு நடந்ததை போன்று நீங்களும் பல மாதங்கள் சிகிச்சை பெற்று மருந்தகங்களுக்கு சென்று மருந்துகள் எதையும் சாப்பிட வேண்டாம் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் பிரகாசத்தை அதிகரிப்பதற்கு என்னிடமிருந்து சில அன்புகளை தருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை சமந்தாவின் பதிவை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.