அழகு நிறைந்த கண்களை பாதுகாப்பதற்கு சூப்பர் டிப்ஸ்..!!

அனைவரையும் பார்த்ததும் கவர்வது நம் கண்கள் மட்டுமே, அவற்றை  பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.

கண்கள் பிரகாசமாக இருக்க வாரம் ஒரு முறை தூய்மையான தேங்காய் எண்ணெய்யை கண்களில் ஒரு துளி விட்டு வந்தால், கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். கண்ணில் உள்ள கருவளையம் மறைய இரண்டு பாதாம் பருப்பை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதை கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையம் மறைந்து விடும்.

கண்களுக்கு தினமும் நன்றாக பயிற்சி அளிப்பதன் மூலம் கண் பார்வை நன்றாக தெரியும். வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும். கண்களை சுற்றியும் வைத்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், பிரகாசமும் ஏற்படும்.

திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வந்தாலும் கண்களின் பார்வை நன்றாக இருக்கும். தேயிலை தூளை நன்றாக கொதிக்க வைத்து அதை வெள்ளைத் துணியில் கட்டி கண்களின் மீது வைத்து வந்தால், கண்ணில் சுற்றி உள்ள கருவளையம் மறைந்துவிடும்.

உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதை கண்களை சுற்றி தடவி வந்தால், கருவளையம் மறைந்துவிடும். வாரத்திற்கு இரண்டு முறை இரவில் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் கண்களில் விட்டு வந்தாலும் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.