அல்சர் மற்றும் குடல் பிரச்சனைக்கு தீர்வு… எளிய முறையில் வீட்டு வைத்தியம்..!!

அல்சர் மற்றும் குடல் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய எளிய முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்..

தேங்காய் பால்:

அல்சர் இருப்பவர்கள் தினமும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.

ஆப்பிள் ஜூஸ்:

தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியை குணமாக்கலாம். தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது  அவசியம்.

எலுமிச்சை ஜூஸ்:

எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால்  அல்சர் மட்டுமின்றி வயிற்றில் உள்ள பிரச்சனைகளும் குணமாகும்.

முட்டைகோஸ்:

அல்சர் இருப்பவர்கள் தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் அல்சரை குணமாக்கலாம்.

அகத்தி  கீரை:

அகத்திக் கீரை நல்லது தினமும் ஒரு கீரையை சமைத்து சாப்பிடுவது இவற்றிலிருந்து  சீக்கிரம் விடுபட உதவும்.

வெங்காயம்:

கடுமையான வயிற்று வலியை சந்தித்தால் பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதன் மூலம் வயிற்றில் ஏற்படும் கடுமையான வலியில் இருந்து விடுபடலாம்.

பீட்ருட்:

பீட்ரூட் அல்சருக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது. அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.

பாகற்காய்:

பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வந்தால் விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக நறுக்கி காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஒரு டீஸ்பூன் பாகற்காய் பொடியை கலந்து குடித்து வருவதன் மூலம் அல்சரில் இருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய்:

வயிற்றுக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். இந்த ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வருவது நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மணத்தக்காளி கீரை:

வயிற்று பிரச்சனை மற்றும் அல்சருக்கு மிகவும் நல்லது. அதனால் அந்தக் கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடுவது விரைவில் அல்சரை குணமாக்கும்.