அலுவலகப் பணி நேரத்தை மாற்றிய 100 நிறுவனங்கள்… எங்கு தெரியுமா…? ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!!

உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பணியைத் தவிர மற்ற நாட்களில் பணி நேரம் நீடிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 100 நிறுவனங்களில் வேலை பார்க்கும் 2,600 பணியாளர்கள் இந்த அறிவிப்பால்  பயனடைவார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆவின் மார்க்கெட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதம் ரோஸ் பேசும்போது, நிறுவனத்தின் வரலாற்றில் நான் பார்த்த மாற்றத்தக்க முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.