அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. யானை தாக்கி பலியான பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

யானை தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன சூண்டி பகுதியில் கணவரை இழந்த ராஜகுமாரி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குயின்ட் பகுதியில் இருக்கும் தனியார் ஸ்டேடில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து ராஜகுமாரியும் சில தொழிலாளர்களும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சாண்டில்ஸ் பகுதியில் இருக்கும் காப்பி தோட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 3 காட்டு யானைகள் துரத்தியதால் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு காட்டு யானை ராஜகுமாரியை பலமாக தாக்கியது.

இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜகுமாரியை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராஜகுமாரியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *