தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வலுப்பெற்று அடுத்து 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு ஆளு பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 16-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் ‌ கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.