மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் தங்கள் பகுதிக்கு அருகே உள்ள இணையதள சேவை மையங்களில் பெயரை பதிவு செய்துள்ளனர். மேலும் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை பதிவு பெற அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டு காலை  8:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் எனவும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதல் நேரம் வழங்கப்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.