ஜார்கண்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் தங்கி இருந்தார். அந்தப் பெண் தனது தந்தையுடன் ஜார்கண்டில் இருக்கும் பல்கலைக்கழக தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார். இரவு நேரம் அவரது தந்தை சாப்பாடு வாங்க சென்றார். அந்த சமயம் சோம்நாத் உள்ளிட்ட ஐந்து வாலிபர்கள் அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

அவர்கள் பலவந்தமாக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை வந்ததும் வாலிபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.