அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழப்பு…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் மாதா கோவில் தெருவில் ஆட்டோ ஓட்டுநரான சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சோனியா(5) என்ற மகளும், மோனிஷ்(3) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சின்னபோரூரில் இருக்கும் மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த வினோதினிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அரசு மருத்துவர்களின் கவனக்குறைவாலும், தவறான சிகிச்சையாலும் தான் வினோதினி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி வினோதினியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோதினியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *