அறிவியல் ஆலோசகர்களின் கருத்துகளுக்கு மறுப்பு ..பிரான்ஸ் ஜனாதிபதி மீது குற்றசாட்டு..!!

அறிவியல் ஆலோசகர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியான  இமானுவேல் மேக்ரோன் கடந்த வசந்த காலத்திலிருந்து  அறிவியல் ஆலோசகர்களின் கருத்துகளை மறுத்து பள்ளிகளை திறந்துள்ளதாக வலது சாரியினரரான மரின் லே பென்  குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று அறிவியல் ஆலோசகர்கள் கூறிய கருத்துகளை மேக்ரான் எதிர்த்துள்ளார்.

அதனால் மேக்ரோனின் சகாக்களே  ஜனாதிபதி தொற்று நோய் நிபுணராகிவிட்டார் என்று கூறி விமர்சித்துள்ளனர்.