”அருண் ஜெட்லி கவலைக்கிடம்” மிகுந்த சோகத்தில் பாஜகவினர்…!!

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார்.

Image result for arun jaitley aiims

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில்அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவில் ஆணுமதிக்கப்ட்டு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும்  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.