“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 47 லட்சம் மோசடி”… கணவன்- மனைவியை கைது செய்த போலீஸார்…!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியில் வசித்து வரும் பஞ்சவர்ணம் என்பவர் ஆடிட்டராக பணியாற்றி வரும் நிலையில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் மலர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் தன்னிடம் அவரின் பல்வேறு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என என்னிடம் அறிமுகம் ஆனார். மேலும் அவர் முன்னாள் முதலமைச்சர் மகனுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதில் நாங்கள் இருவரும் தொழில்முறை கூட்டாளிகள் எனவும் சில ஆவணங்களை என்னிடம் காட்டினார்.

இதையடுத்து அரசியல் பிரபலங்களுடன் எடுத்த போட்டோக்களையும் காண்பித்து பின் அவரும் அவரது மனைவி ரேணுகாவும் அவரும் எனது குடும்பத்தோடு நன்கு பழகி வந்தார்கள். இந்நிலையில் நாங்கள் பலருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணி நியமன ஆணைகளை என்னிடம் காட்டினார். மேலும் எனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடம் இருந்து பல தவணைகளில் ரூபாய் 40 இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டார். இதையடுத்து அதிமுக ஆட்சி முடிந்ததால் வேலை வாங்கித் தருவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து திமுக அமைச்சர்கள் பலரையும் தனக்கு தெரியும் என்று கூறி அவர்களுடன் சேர்த்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை காண்பித்ததோடு மேலும் 10 லட்சம் கொடுத்தால் அரசு சிமென்ட் கம்பெனியில் எனது அக்கா மகனுக்கு மேலாளர் பதவி வாங்கித் தருவதாக கூறியதோடு நான் கொடுத்த பணத்தில் அதைகழித்துக் கொள்ளுமாறு கூறினார்.

இதையடுத்து ஒரு பெண் ஒருவர் தனக்கு தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து முதலமைச்சரின் தனிச்செயலாளர் பேசுவதாக கூறி சிமென்ட் கம்பெனியில் வேலை உறுதி ஆகி விட்டதாகவும் உடனே ஸ்ரீ புகழ் இந்திராவை சந்தித்து பேசிக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.  எனக்கு வந்த அந்த போன் நம்பரை விசாரணை செய்தபோது அந்த நம்பர் ஸ்ரீ புகழ் இந்திராவின் மகளின் நண்பர் என்பது தெரியவந்தது. அவர்கள் மோசடி செய்தது தெரிய வந்ததையடுத்து நான் அவர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்து குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார்கள். ஆகையால் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *