அரசு பேருந்து மீது மோதிய டிப்பர் லாரி…. 2 பேர் பலி; 9 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!!

உத்திரமேரூர் ஒன்றியம் படூரிலிருந்து அரசு பேருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமயிலூர் அருகே சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரி அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரதி(21), புனிதா(51) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த பள்ளி தலைமை ஆசிரியை மோகனா குமாரி, சுரேஷ், ஜெசிக்கா உட்பட 9 பேரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடி லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.