தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நேற்றைய தினம் பள்ளி பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு இன்று பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்களோடு சேர்த்து நோட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் ஜனவரி 5-ஆம் தேதி அன்று நோட்டுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.