அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்….? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக விநியோகம் செய்ய உத்தரவிடுமாறு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு திங்கட்கிழமை நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.

அரசு பள்ளி மாணவிகளின் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விவாகரத்தை மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார்எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.