அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பள்ளி கல்வித்துறை போட்ட சூப்பர் பிளான்….!!!!!!!

ஐந்து வயது முழுமையடைந்து அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு பள்ளிகள் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் விதமாக பேனர்கள்  வைப்பதுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட இருப்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை கோடை விடுமுறையில் பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே நடத்த வேண்டும். மேலும் ஒற்றை இலக்கத்தில் மாணவர்களின் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகள் ஐந்து வயதானவர்களை கண்டறிந்து அவர்களையும் பள்ளிகளை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளையும் கண்டறிந்து சேர்க்க வேண்டும்.

மேலும் ஊக்கப் பரிசு வழங்குவது வழியே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள், கல்வி ஊக்கத் தொகைகள் பற்றி பெற்றோரிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் பள்ளி மேலாண்மை சார்பில் பரிசுகள் வழங்க ஊக்கப்படுத்தலாம். 100 சதவீத மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *