அரசு பள்ளிகளில் 27000 காலி பணியிடங்கள்… ஆசிரியர்களை நியமனம் செய்ய கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கல்வி ஆண்டு தொடங்கும் முன்பாக நிரப்ப கர்நாடக கல்வித்துறை முயற்சித்து வருகிறது. தற்போது கர்நாடக அரசு துவக்கப் பள்ளிகளில் மொத்தம் 27 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்நிலையில் வருகிற 29-ஆம் தேதி அன்று புதிய கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. நிரந்தர பணியாளர்களுக்கு தேர்வு நடத்தி அதன் மூலமாக நியமனம் செய்வதற்கான கால அவகாசம் தற்போது இல்லை.

இதன் காரணமாக அரசு துவக்கப் பள்ளிகளுக்கான 27 ஆயிரம் காலி பணியிடங்களை கௌரவ ஆசிரியர்கள் மூலம் நிரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 26 ஆம் தேதிக்குள் குறைந்தபட்ச கல்வி தகுதி மூலம் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் ஆசிரியர் நியமனம் குறித்த விவரங்களை ஜூன் 10-ஆம் தேதிக்குள் கல்வித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.