அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. ஜூலை 6 கடைசி நாள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வருகின்ற ஜூலை 6ஆம் தேதிக்குள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் :விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி பின்வருமாறு:- திருத்தணி கல்வி மாவட்டம் [email protected], திருவள்ளூர் கல்வி மாவட்டம் [email protected], ஆவடி கல்வி மாவட்டம் [email protected], அம்பத்தூர் கல்வி மாவட்டம் [email protected], பொன்னேரி கல்வி மாவட்டம் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி.

நாமக்கல்: விண்ணப்பங்களை நாமக்கல் கல்வி அலுவலருக்கு [email protected] என்கிற முகவரியிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலருக்கு [email protected] என்கிற முகவரியிலும் அனுப்ப வேண்டும்.

இதனைப் போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இதில் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *