தமிழகத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். விழுப்புரத்தில் கள ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
குடிநீர் மற்றும் பட்டா வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். கள ஆய்வு நோக்கம் நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.