புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித் தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, அகவிலைப்படி 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25% உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் சீருடை படி 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.