அரசு இணையதளங்களில் ஆசிய மொழிகளில் மொழிபெயர்ப்பு…. ஜனாதிபதி ஆணையம் பரிந்துரை…!!!!!!

ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய் பசிபிக் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் கூட்டாட்சி இணையதளங்களை இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மற்றும் பிற ஆசிய  மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிய அமெரிக்கர்கள் பூர்வீக ஹவாய் மற்றும் பசுபிக் தீவுகளில் வசிப்பவர்கள் பற்றிய ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் இதுதொடர்பான பரிந்துரைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முழு ஆணையம் பல ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவுகளில் வசிப்பவர்கள் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தங்கள் வலைதளங்களில் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் படிவங்களை ஏஜென்சிகள் வழங்கவேண்டும் என பரிந்துரைத்திருக்கின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மாளிகை எடுக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக ஹவாய் பசுபிக் தீவுகள் சேர்ந்தவர்களின் மக்கள் தொகை தற்போது அதிகரித்து வருகின்றது. மேலும் இது வருகின்ற 2060 ஆம் வருடத்தில் 40 மில்லியனை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தில்  முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *