அரசு அலுவலகங்களில் ஆவின் இனிப்புகள் விற்பனை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று ஆவின் நிறுவனம் பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றில் ரூ.13 கோடி அளவிற்கு விற்கப்பட்டது. அதில் ஆவின் சிறப்பு இணைப்புகள் மட்டும் 1.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைப்போலவே ஆவின் நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளிக்கு 5 வகை புதிய இனிப்புகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு 25 டன் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை  அதிகமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து பண்டிகை காலங்களில் ஆவின் நிறுவன உற்பத்திப் பொருட்களை கூட்டுறவுத் துறை வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆவின் நிறுவன உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் மற்ற துறைகள் ஆவின் இனிப்புகளை வாங்காமல் தனியார் கடைகளில் சதவீத அடிப்படையில் சலுகை பெற்று இனிப்புகள் வாங்கப்படுகின்றன. அதனால் இந்த ஆண்டு அரசு துறைகளில் ஆவின் இனிப்புகளை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதற்காக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளில் ஆவின் நிறுவனம் ஆலோசனை செய்ய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *