அரசுக்கு சொந்தமான ஏரி… 30 ஏக்கரில் பயிர்கள்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த நிலத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் 216 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தை அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்களை 30 ஏக்கரில்  பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது மழை பெய்து வருவதால் இந்த ஏரி நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி பொறியாளர் அறிவழகன், சர்வேயர் உமாநாத், மற்றும் நிர்வாக அலுவலர் செல்லம் ஏரியை அளவீடு செய்தனர். பின்னர் 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *