செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன், செங்கலாம் என்ற வெப் தொடரில் நீங்கள் அரசியல்வாதியாக படித்துள்ளீர்கள் அப்போது கூட அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தீர்கள், தற்போது அந்த மனநிலையில் இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அரசியலுக்கு அவங்க வரணும் இவங்க வரணும்னு கிடையாது, யாரு வேண்டுமானாலும் வரலாம் என்று பதில் அளித்தார். மேலும் செங்கலும் பண்ணும் போது இந்த ஆசை இருந்தது. இப்பவும் அரசியலுக்கு வரும் ஆசை உள்ளது என்று கூறியுள்ளார். அதேசமயம் நடிகர் விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் என்ன செய்வார் என்பதையும் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.