அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்…? – மீண்டும் பரபரப்பு…!!!

நடிகர் விஜய் தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வருவார் என்று அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதன் பின்னர் விஜயின் பெயரில் கட்சி தொடங்க இருப்பதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் 2026 இல் நடிகர் விஜய் அரசியலில் இறங்குவார் என்று அவருடைய தந்தை மறைமுகமாக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 இல் மாற்றம் வேண்டும் என்றால் ஒரு கோடி மக்களுக்கும் மேல் நோட்டாவில் வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தவர்கள் மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள் என்றும், நமக்கான அரசியல்வாதி வருவார் என விஜயை குறித்து மறைமுகமாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது.