தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசின் முன்னெடுப்பு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் அரசு திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவது உறுதி செய்யும் நடைமுறைகள் பற்றியும், அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அரசு என்பது முதல்வர் மட்டுமல்ல அதிகாரிகள் அமைச்சர்கள் ஊழியர்கள் என அனைவரும் சேர்ந்தது தான் அரசியல்.
தற்போது அனைவரும் சேர்ந்து நடத்தும் நல்லாட்சி நடக்கிறது. அதனை இன்னும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும். அனைத்து மக்களும் பாராட்டும் விதமாக அதனை செயல்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகாலம் ஏற்பட்ட தொய்வினை சரி செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிறு சிறு சுனக்கங்களை அந்த துறை அதிகாரிகள் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.