திருவாரூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பாக திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள வன்மீகபுரத்தில் நேற்று அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு செல்வராக எம்.பி பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, ஒன்றிய குழு தலைவர் தேவா வருவாய் கோட்டாட்சிய சங்கீதா, துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் நகர்மன்ற உறுப்பினர் புவன பிரியா செந்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கண்காட்சியில் அனைத்து துறைகளின் காட்சி அரங்குகள் இடம் பெற்றது. முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக ராட்சத பலூனை கலெக்டர் பறக்கவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தாட்கோ அலுவலகத்தின் சார்பாக இரண்டு பயனாளிகளுக்கு மாநில விலையில் டிராக்டர்களையும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.