அம்மா ஜெயலலிதா பிறந்தநாள்…. அமைச்சர்கள் பலர் கூட…. 140 இலவச திருமணம்….!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.

திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜர் ஏற்பாட்டில் 140 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்திவைத்தார். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி,வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தனர். அவர்கள் மட்டுமல்லாது இந்நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகளின் உறவினர்களும். அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து கூறினர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *