“அம்மா சாப்பிட்டு 6 நாள் ஆச்சு!… ஓ இது தான் நல்ல படமோ?… டிரைக்டர் வினோத்தை கேலி செய்த தளபதி ரசிகர்கள்….!!!!

நடிகர் அஜித்குமார், டிரைக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம்தான் “துணிவு”. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அத்துடன் மஞ்சுவாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் டிரைக்டர் வினோத் பேட்டி அளித்தபோது, வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறியுள்ளார்.

மேலும் டுவிட்டர் பக்கத்தில், யூடியூபில் காசு வாங்கிக் கொண்டு போலியான தகவல்களை கூறுகிறார்கள் எனவும் கூறியுள்ளார். அதற்கு “அம்மா சாப்பிட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா..?” என்று வலிமை திரைப்படத்தின் வசனங்களை வைத்து விஜய் ரசிகர்கள், டிரைக்டர் வினோத்தை கேலி செய்து வருகின்றனர். இயக்குநருக்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் குணம் இல்லை எனவும் விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். அதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் வசனங்களை கேலி செய்துள்ளனர்.