“அம்மா உணவகத்தில் குறையும் மக்கள் கூட்டம்”….. இதை செய்தால் அதிகரிக்கும்…. கோரிக்கை விடுக்கும் மக்கள்….!!!!!!

அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்கள் கூட்டம் குறைந்து வருவதாக உணவு வகைகளை அதிகரித்து விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், தொழிலாளிகள் என பலருக்கும் உதவும் வகையில் 2013 ஆம் வருடத்தில் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் என பலரும் பயனடைந்து வருகின்றார்கள்.

இந்த உணவகம் சென்னையை போல இரவிலும் செயல்பாட்டால் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட அம்மா உணவகங்களில் காலையில் இட்லியைத் தவிர பொங்கல், தோசை, வெரைட்டி ரைஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றது. மேலும் சென்னையில் இரவில் சப்பாத்தி வழங்கப்படுகின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் வயிறார உணவு உண்கின்றார்கள். இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி அம்மா உணவகங்களிலும் இதுபோல உணவுகளை வழங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.