அம்மா இதுக்கு சரின்னு சொல்லலயே..! மாணவன் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே ஏழாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டி சூசையார்புரத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கிஷோர் என்ற மகன் இருந்தார். இவர் ஏழாம் வகுப்பு அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் ராஜேஸ்வரியிடம் தனது நண்பர்களுடன் விளையாட போவதாக கூறியுள்ளான். அதற்கு அவரது தாய் விளையாட செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் வீட்டில் உள்ள வேலையை பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

இதனால் கிஷோர் மனவேதனை அடைந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் காவல்துறையினர் கிஷோரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் என்று தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.