அம்மா அவதாரம் எடுத்த பிரபல நடிகை…. யார் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா ஓ-2 படத்தில் அம்மா அவதாரம் எடுத்துள்ளார்.

நயன்தாரா நடித்து முடித்துள்ள  படம் ‘ஓ-2’  என்ற பெயரில் வெளியாகியுள்ளது.விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கின்றனர். சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில்  ஆக்சிஜன் என்பது எவ்வளவு முக்கியம்  என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதனை  அடிப்படையாக கொண்டு  இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்  விக்னேஷ்.

விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தனது  8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்  காரணமாக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் இருக்கும் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இந்த கதை  நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது”. இந்த படத்தில் அம்மா பார்வதி என்ற  கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *