“அம்மாவுக்கு பயந்து” 6 வயதில் சொல்லாததால்…. 53 ஆண்டுகள் கழித்து…. மூக்கில் காத்திருந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவருக்கு மூக்கிலிருந்த பொருள் 53 வருடங்கள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. 

ரஷ்யாவில் வசித்துவரும் 59 வயதான நபரொருவர் தன் 6 வயதில் தனது மூக்கில் சிறிய அளவிலான பொருள் ஒன்றை வைத்து விளையாடியுள்ளார். அப்போது அவரின் வலது நாசியில் அப்பொருள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனை சொன்னால் தன் அம்மா அடிப்பார் என்ற பயத்தில் சொல்லாமல் இருந்துள்ளார். அதன் பின்பு அவர் அதனை மறந்து விட்டார். இந்நிலையில் 53 வருடங்களாக எந்த பாதிப்புமின்றி வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென அவரது வலது நாசியில் மூச்சு காற்று செல்லவில்லை இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.

அப்போது அவரது மூக்கில் உள்ள வலது நாசியில் பழைய துருப்பிடித்த நாணயம் ஒன்று இருந்துள்ளது. மேலும் Rhinolithis எனப்படும் கற்கள் அந்த நாணயத்தை சுற்றி உருவாகியிருந்துள்ளது. அதுதான் சுவாசிக்கும் திறன் கட்டுப்படுத்தி இருந்துள்ளது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன்பின் மருத்துவர்கள் எண்டோஸ்கோபிக் என்ற அறுவை சிகிச்சையை செய்து அந்த நாணயத்தை வெளியே எடுத்துள்ளனர்.  53 வருடங்களுக்கு பின் அவரது மூக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நாணயமானது கடந்த 1991 ஆம் வருடத்திலேயே வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.