அம்மாடியோ…. ராட்சத சிலந்தியுடன் அசால்டாய் விளையாடும் சிறுமி….. இணையதளத்தில் டிரெண்டாகும் வீடியோ….!!!!

தற்போதைய உலகத்தில் இணையத்தில் பலவிதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க, சிரிக்க, ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. சமூக வலைதளத்தில் பலவித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து விலங்குகள் தொடர்பான வீடியோக்களை தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அருகில் சென்று பார்க்க முடியாத இந்த விலங்குகளை வீடியோக்கள் மூலம் காண மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் இந்த உயிரினங்களை அசால்டாக கையாளும் சிலரும் இருக்கின்றார்கள். அவர்களது வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகி வியக்க வைக்கிறது.

அதன்படி தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு சிறுமி பிரம்மாண்டமான சிலந்தியுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலந்திய கண்டால் பெருமானாலான குழந்தைகள் அலறியடித்து ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த வீடியோவில் சிறுமி, ஒரு பெரிய சிலந்தியுடன் பயமின்றி விளையாடிக்கிறார். அவர் சாதாரணமாக சிலந்திகளை கையில் எடுக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனது முதுகிலும் ஊர்ந்து செல்ல அனுமதிக்கிறார். அவர் நடவடிக்கையை பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமே இல்லாதது போல் தோன்றுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.